உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புஷ்ப பல்லக்கில் கடலுார் நாகம்மன் வீதியுலா

புஷ்ப பல்லக்கில் கடலுார் நாகம்மன் வீதியுலா

கடலுார்: கடலுார் நாகம்மன் கோவில் செடல் பெருவிழாவில் சுவாமி புஷ்ப பல்லக்கில் வீதியுலா நடந்தது.  கடலுார் பஸ் நிலையத்தில் உள்ள நாகம்மன் கோவில் செடல் பெருவிழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் தீபாராதனை, அம்மன் வீதியுலா நடந்தது. 9ம் நாள் உற்சவமான கடந்த 18ம் தேதி செடல்  பெருவிழா நடந்தது. நேற்று முன்தினம் மஞ்சள் நீராட்டு உற்சவத்தை தொடர்ந்து இரவு புஷ்ப பல்லக்கில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !