உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 144 ஆண்டுக்கு பின் காவிரி மஹா புஷ்கரம்

144 ஆண்டுக்கு பின் காவிரி மஹா புஷ்கரம்

சேலம்: தமிழகத்தில், 144 ஆண்டுகளுக்கு பின், செப்., 12 முதல், 23ம் தேதி வரை, காவிரி மஹா புஷ்கரம் எனும், புனித நீராடல் நடக்கிறது. காவிரி புஷ்கர பிரம்ம யக்ஞ கமிட்டி தலைவர் ஸ்ரீராம், சேலத்தில் கூறியதாவது:ராசிக்கு உகந்த புண்ணிய நதிகளில், புஷ்கரம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதன் படி, செப்., 12ல், குரு பகவான், துலாம் ராசியில் பிரவேசிப்பதால், காவிரி ஆற்றில், புஷ்கரம் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில், 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் காவிரி மஹா புஷ்கரம், செப்., 12ல் துவங்கி, 23 வரை கொண்டாப்படுகிறது.கர்நாடகாவில், தலைக்காவிரி துவங்கி பல்வேறு இடங்களில், புஷ்கரம் நடக்கிறது. தமிழகத்தில், மேட்டூர் துவங்கி, பூம்புகார் வரை புஷ்கரம் நடக்கிறது. திருச்சி, ஸ்ரீரங்கம் காவிரி கரையில், திரிதண்டி ஸ்ரீமந்நாராயண ராமானுஜ சின்ன ஜீயர் தலைமையில், 25 ஜீயர்கள் முன்னிலையில் புஷ்கரம் நடக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !