உலக நன்மைக்காக ஆன்மிக ஊர்வலம்
ADDED :2980 days ago
நெய்வேலி: நெய்வேலியில் மேல்மருவத்துார் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் உலக நன்மைக்காக நடத்திய ஆன்மிக ஊர்வலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். உலக மக்களிடையே மனிதநேயம் தழைக்கவும், மழை வளம் பெருகவும், இயற்கை வளம் செழித்திடவும் ஆன்மிக ஊர்வலம் நடந்தது. நெய்வேலி வட்டம் 5ல் உள்ள கதிர்காம வேலவர் கோவில் வளாகத்தில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட செவ்வாடை அணிந்த பெண்கள் கஞ்சிக் கலயம் சுமந்து பங்கேற்ற ஆன்மிக ஊர்வலம் புறப்பட்டது. நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஊர்வலம் வட்டம் 12 ல் உள்ள ஆதிபராசக்தி மன்றத்தில் முடிந்தது. ஏற்பாடுகளை நெய்வேலி ஆதிபாராசக்தி வழிபாட்டு மன்ற நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.