ஏகாம்பரநாதர் கோவில் வளாகத்தில், குளம்
ADDED :3027 days ago
காஞ்சிபுரம் :காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் வளாகத்திற்குள், மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேவாரம் பாடல் பெற்ற தொண்டை நாட்டு தலங்களில், முதல் தலமான காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு, தமிழகத்தில் இருந்தும், பல மாநிலங்களில் இருந்தும், தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோவிலின், ராஜகோபுரத்தை கடந்து உள்ளே செல்லும் பகுதியில், சமீபத்தில் பெய்த மழையால், ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளது. இதில் செல்ல முடியாமல் பக்தர்கள் அவதிப்படுகின்றனர். கோவில் வளாகத்திற்குள் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.