உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழமை வாய்ந்த பழனியப்பர் கோவில் ரூ. 15 கோடியில் புனரமைக்கும் பணி

பழமை வாய்ந்த பழனியப்பர் கோவில் ரூ. 15 கோடியில் புனரமைக்கும் பணி

நாமகிரிப்பேட்டை: வரலாற்று சிறப்புமிக்க, பழனியப்பர் கோவிலை, 15 கோடி ரூபாயில், புனரமைக்கும் பணி நடந்து வருகிறது. நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை அடிவாரம், பள்ளிப்பட்டியில், பழனியப்பர் கோவில் உள்ளது. வல்வில் ஓரி அரசனால் வழிபாடு செய்யப்பட்ட தளங்களில் முதன்மையானது. பலநூறு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இக்கோவில், வல்வில் ஓரி காலத்தில் குட முழுக்கு செய்யப்பட்டுள்ளது. கிருத்திகை, அமாவாசை, தைப்பூசம், பவுர்ணமி, கார்த்திகை தீபம் ஆகிய நாட்களில் சிறப்பு பூஜைகள் நடக்கும். பவுர்ணமியில் பக்தர்கள் கிரிவலமும் வருகின்றனர். இப்பகுதி மக்கள், இங்கு திருமணம் செய்வதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில், கோவிலை சீரமைத்து கும்பாபி?ஷகம் செய்யும் பணி துவங்கியுள்ளது. 15 கோடி ரூபாய் மதிப்பில் உணவு கூடம், பொங்கு மண்டபம், தங்கும் அறை, சமுதாய கூடம், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, கழிவறைகள், நந்தவனம், மூலிகை தோட்டம், மூலிகை வைத்திய சாலை, கிரிவலப்பாதை, புதிய தேர், வாகனங்கள் நிறுத்தும் இடம் பணி ஆகியவை நடக்கவுள்ளது. தற்போது, கோவிலை சுற்றி அகலப்படுத்தும் பணி நடக்கிறது. பழனியப்பர் கொல்லிமலை கைங்கரிய பணிக்குழுவினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !