ஆலங்குடி ஞான தட்சிணாமூர்த்தி
ADDED :3083 days ago
நவக்கிரக தலங்களில் குருவுக்குரியது திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயில். இங்குள்ள தட்சிணாமூர்த்தி, ஞானம் தருபவராக வீற்றிருக்கிறார். சுந்தரர் இங்கு வந்த போது, சிவபெருமான் வெள்ளப்பெருக்கு ஏற்படச் செய்தார். ஆற்றின் மறுகரையில் நின்ற சுந்தரரிடம் ஓடக்காரர் ஒருவர், கோயிலுக்கு செல்வதாக கூறி அழைத்து வந்தார். ஆற்றின் நடுவழியில் ஓடம் கவிழும் நிலை ஏற்பட்டது. கலங்கிய சுந்தரர் சிவனை வேண்ட, அவருக்கு காட்சி தந்த சிவன், தானே ஓடக்காரராக வந்ததை உணர்த்தினார். ஞான குருவாக இருந்து உபதேசம் செய்தார். இதனால் இவருக்கு ஞான தட்சிணாமூர்த்தி என்று பெயர் வந்தது. குரு பெயர்ச்சி விழா இங்கு சிறப்பாக நடக்கும்.
தொடர்புக்கு: 04373 – 269 407