ஐயப்ப பக்தர்கள் பால்குட ஊர்வலம்
ADDED :5175 days ago
கடலூர் : கடலூரில் ஐயப்ப பக்தர்கள் பால்குடம் சுமந்து ஊர்வலம் வந்தனர். சபரிகிரீச சத்ஜன சேவா சங்கம் சார்பில் பால்குட ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஐயப்ப பக்தர்கள் தலையில் பால்குடங்களை சுமந்து ஊர்வலமாக வந்தனர். கடலூர் புதுப்பாளையம் முத்தாலம்மன் கோவிலில் துவங்கிய ஊர்வலம், புதுப்பாளையம் மெயின் ரோடு, பாரதி சாலை, நேதாஜி சாலை வழியாக சாலைக்கரை மாரியம்மன் கோவிலில் முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து அக்கோவிலில் உள்ள ஐயப்ப சுவாமிக்கு 27 பொருட்களால் அபிஷேகம், வேத பாராயணம், புஷ்பாஞ்சலி நடந்தது. ஏற்பாடுகளை சத்ஜன சேவா சங்க உறுப்பினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.