உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரனூர் கோவில் தேரோட்டம்: பக்தர்கள் குவிந்தனர்

பரனூர் கோவில் தேரோட்டம்: பக்தர்கள் குவிந்தனர்

திருக்கோவிலூர்: பரனூர் ராதிகா ரமண பக்த கோலாகலன் கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அடுத்த பரனூர்,  ராதிகா ரமண பக்த கோலாகலன் கோவில் ஜெயந்தி விழா, கடந்த 14ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய உற்சவமான தேரோட்டம் நேற்று நடந்தது. காலை 8:00 மணிக்கு‚ ராதிகா ரமண பக்த கோலாகலன் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி, மேளதாளம் முழங்க, தேர் நிலைக்கு எழுந்தருளினார். வேதமந்திரங்கள் முழங்க, அலங்கரிக்கப்பட்ட தேரில், சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கிருஷ்ணப்ரேமி சுவாமிகள், தேரோட்டத்தை துவக்கி வைத்தார்.  ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து, கோவிந்தா கோஷம் முழங்க, முக்கிய வீதிகள் வழியாக தேரை இழுத்துச் சென்றனர். பக்தர்கள் பஜனை பாடல்களை பாடி, ஆடியவாறு சென்றனர். மாலை 4:00 மணிக்கு‚ தேர் நிலையை அடைந்தவுடன், தீர்த்தவாரி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !