ஐகோர்ட் தலைமை நீதிபதி நடராஜர் கோவிலில் தரிசனம்
ADDED :3080 days ago
சிதம்பரம்: சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, சிதம்பரம் நடராஜர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் கொல்கத்தா ஐகோர்ட் தலைமை நீதிபதி நிஷிதா மகேந்தே (பொறுப்பு) ஆகிய இருவரும், சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு நேற்று வருகை தந்தனர். நீதிபதிகளை, கோவில் பொது தீட்சிதர்கள் சார்பில் பாஸ்கர தீட்சிதர் தலைமையில் வரவேற்று, கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர். நடராஜ சுவாமிக்கு நடந்த சிறப்பு பூஜையின்போது, இரு நீதிபதிகளும் கனகசபையில் நின்று சுவாமி தரினம் செய்தனர். சிதம்பரம் நீதிமன்ற நீதிபதிகள், தாசில்தார் மகேஷ் மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.