உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமக்குடியில் விநாயகர் சதுர்த்தி: இன்று ஊர்வலம்

பரமக்குடியில் விநாயகர் சதுர்த்தி: இன்று ஊர்வலம்

பரமக்குடி: பரமக்குடியில் கோயில், வீடுகள், பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். தொடர்ந்து இன்று மாலை இந்து முன்னணி சார்பில் விநாயகர் ஊர்வலம் நடக்கிறது. பரமக்குடியில் இந்து முன்னணி சார்பில் சுமார் 40 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இங்கு தீபாராதனை, அன்னதானம், உறி அடித்தல், கோலப்போட்டிகள், திருவிளக்கு பூஜை என பல்வேறு இடங்களில் கொண்டாடி மகிழ்ந்தனர். பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் உள்ள விநாயகருக்கு காலை சிறப்பு அபிேஷகம், பிரசாதம் வழங்கப்பட்டன. அனுமார் கோதண்டராமசாமி கோயில், ஈஸ்வரன் கோயில், முத்தாலம்மன்கோயில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், சுப்பிரமணியசுவாமி கோயில், கல்பட்டறை விநாயகர் கோயில் என அனைத்து இடங்களிலும் சிறப்பு அபிேஷகம், தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஈஸ்வரன் கோயிலில் இரவு 7:00 மணிக்கு விநாயகர் மூஷிக வாகனத்தில் வீதியுலா வந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !