வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :3061 days ago
செங்கல்பட்டு:பெரிய நத்தம் பகுதியில், ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோவில், கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.செங்கல்பட்டு பெரியநத்தம் அன்னை அஞ்சுகம் நகரில், வரசித்தி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில், 12 ஆண்டுகளுக்கு முன் கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த மாதம், கோவில் திருப்பணிகள் துவங்கி, சில தினங்களுக்கு முன் நிறைவடைந்தது. நேற்று, கும்பாபிஷேகம் நடந்தது. காலை, 10:00 மணிக்கு, கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது.பின், வரசித்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகமும், சந்தான காப்பு பூஜையும் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.