காரைக்குடியில் விநாயகர் சிலைகள் கரைப்பு
காரைக்குடி: காரைக்குடி, குன்றக்குடி, சாக்கோட்டை செட்டிநாடு உள்ளிட்ட பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் 116 சிலைகள் கடந்த ஆக.24-ம் தேதிபிரதிஷ்டை செய்யப்பட்டன. காரைக்குடி நகர் பகுதியில் வைக்கப்பட்ட 64 சிலைகள் நேற்று மாலை 5 :00 மணியளவில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு டி.டி.நகர் விநாயகர் கோயிலில் ஒன்று கூடி அங்கிருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக கீழ ஊரணியில் சென்று கரைக்கப்பட்டது. ஊர்வலத்தை பா.ஜ., தேசிய செயலாளர் எச்.ராஜா தொடங்கி வைத்தார். மாவட்ட தலைவர் சொக்கலிங்கம், மாவட்ட துணை தலைவர் விஸ்வநாத கோபாலன், பொருளாளர் சந்திரசேகர், நகர தலைவர் கார்த்திக், பொது செயலாளர்கள் மெய்யப்பன், பரமேஸ்வரன், நகர பொருளாளர் ரவி, ஆர்.எஸ்.எஸ்., தென் மாநில பொறுப்பாளர் சூர்யா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை இந்து முன்னணி மாவட்ட அமைப்பாளர் அக்னி பாலா, மாவட்ட தலைவர் நாகலிங்கம், நகர தலைவர் ராஜா, பொது செயலாளர் சரவணன் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.