புதுச்சேரியில் விநாயகர் சிலைகள் கடலில் விஜர்சனம்
ADDED :3000 days ago
புதுச்சேரி: விநாயகர் சதுர்த்தி விழா முடிந்து, மூன்றாம் நாளான நேற்று ஏராளமானோர் சிலைகளை கடலில் கரைத்தனர். புதுச்சேரியில், விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 25ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. களி மண்ணினால் ஆன விநாயகர் சிலைகளை பொதுமக்கள் வாங்கி சென்று வீட்டில் வைத்து வழிபாடு நடத்தினர். விநாயகர் சிலைகளை 3ம் நாள் அல்லது 5ம் நாள் நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம். மூன்றாம் நாளான நேற்று ஏராளமானோர் வீட்டில் வைத்து வழிபாடு நடத்திய விநாயகர் சிலைகளை கடலில் கரைத்தனர். காலாப்பட்டு, தந்திராயன்குப்பம் கடற்கரைகளில் சிலைகள் கரைக்கப்பட்டன. புதுச்சேரி கடற்கரை பகுதியிலும் சிறிய விநாயகர் சிலைகளை கரைக்க கூட்டம் அலை மோதியது.