உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கங்கையம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் விழா

கங்கையம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் விழா

திருத்தணி : கங்கையம்மன் கோவிலில், நேற்று நடந்த மூன்றாம் ஆண்டு விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். திருத்தணி நகராட்சிக்குட்பட்ட அமிர்தாபுரம் ஏரிக்கரையின் மீது கங்கையம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் மூன்றாம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி, நேற்று முன்தினம் மாலை, முதல்கால யாகசாலை பூஜைகளுடன் விழா துவங்கியது. இதற்காக, கோவில் வளாகத்தில் ஒரு யாகசாலை, 18 கலசங்கள் வைத்து, கணபதி பூஜை, வாஸ்து பூஜை யாகசாலை பிரவேசம் கலச ஸ்தாபனம் மற்றும் யாகசாலை பூஜை மற்றும் பூர்ணாஹூதி நடந்தது. நேற்று காலை, 7:00 மணிக்கு இரண்டாம் காலபூஜை, கலசாபிஷேகம் நடந்தது. காலை, 9:00 மணிக்கு, கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும், நண்பகல், 11:00 மணிக்கு மூலவர் அம்மனுக்கு மஹா அபிஷேகமும் நடந்தது. மாலை, 3:00 மணி முதல், 6:00 மணி வரை, திரளான பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனர். மாலை, 6:30 மணிக்கு, உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவையொட்டி, கோவில் வளாகம் மற்றும் அமிர்தாபுரம் பகுதி முழுவதும் வண்ண விளக்குளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !