அய்யனாரப்பன் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED :2999 days ago
கிருஷ்ணராயபுரம்: லாலாப்பேட்டை அடுத்த, மேலவிட்டுகட்டி அய்யனாரப்பன் சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. முன்னதாக, லாலாப்பேட்டை காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக் குட ஊர்வலம் நேற்று முன்தினம் நடந்தது. மாலை யாக சாலை வேள்வி பூஜை தொடங்கியது. நேற்று காலை இரண்டாம் கால யாக பூஜை துவங்கியது. கோவில் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. விநாயகர், அய்யனாரப்பன், பகவதி அம்மன் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. விழாவில், லாலாப்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.