செஞ்சியில் விநாயகர் சிலை ஊர்வலம்
ADDED :2999 days ago
செஞ்சி: செஞ்சியில், அகில இந்திய இந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது. செஞ்சியிலுள்ள விழுப்புரம் சாலை பொன்பத்தி ஏரிக்கரையில் இரண்டு இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து, விநாயகர் சதுர்த்தி விழா நடத்தினர். இந்த விநாயகர் சிலைகளை நேற்று ஊர்வலமாக எடுத்து சென்று சங்கராபரணி ஆற் றில் விஜர்சனம் செய்தனர். முன்னதாக நடந்த விநாயகர் ஊர்வலத்திற்கு கட்சியின் நிறுவன தலைவர் ராஜா தலைமை தாங்கினார். தேசிய அமைப்பாளர் வராகி சுந்தர், துவக்கி வைத்தார். மாநில அமைப்பு செயலாளர் சோலை, ஐந்தொழில் சங்க தலைவர் தேவராஜ், நிர்வாகிகள் முருவம்மாள், சந்தானம், தங்கராஜ், சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழுப்புரம் சாலையில் துவங்கிய ஊர்வலம், திண்டிவனம் சாலை வழியாக சங்கராபரணி ஆற்றை சென்றடைந்தது.