சகுனம் பார்க்காதீர்
ADDED :3073 days ago
அக்காலத்தில் ஆந்தை அலறினால் நல்லதல்ல என்று, நல்ல செயல் செய்யக்கூடாது என ஒத்தி வைத்து விடுவர். பறவைகளை விரட்டியடித்து, அவை எந்த திசையில் பறக்கின்றனவோ அதைப் பொறுத்தும் நல்ல விஷயங்களை செய்யும் வழக்கம் இருந்தது. இத்தகைய சகுனம் பார்க்கும் மூடப்பழக்கத்தை, நபிகள் விரும்பவில்லை. நல்லதைச் செய்ய நாள் பார்க்க தேவையில்லை. இறைவனே அனைத்துக்கும் ஆதாரம். அவரை உண்மையாக நம்புபவர்களுக்கு, எல்லா நாளும் நல்ல நாள் தான் என்பது நபிகளின் கொள்கை.