உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சோழர்களின் கட்டட கலைக்கு பல்லவர்களே முன்னோடி

சோழர்களின் கட்டட கலைக்கு பல்லவர்களே முன்னோடி

சென்னை:”சோழர்களின் கட்டட கலைக்கு, பல்லவர்களே முன்னோடி,” என, தமிழக தொல்லியல் துறை முன்னாள் இணை இயக்குனர், மா.சந்திரமூர்த்தி பேசினார்.

கற்றளிகள்: தமிழக தொல்லியல் துறை சார்பில், அறநிலையத்துறை செயல் அலுவலர்களுக்கு, பாரம்பரிய கட்டட பாதுகாப்பு குறித்த பயிற்சி, சென்னையில் நேற்று முன்தினம் துவங்கியது. இதில், ’தமிழக கோவில் கட்டட கலையின் தோற்றமும், வளர்ச்சியும்’ என்ற தலைப்பில், தொல்லியல் துறை முன்னாள் இணை இயக்குனர், மா.சந்திரமூர்த்தி பேசியதாவது: தமிழகத்தில் கருங்கல் கட்டடக்கலை, பல்லவர்களின் வருகையால், ஏழாம் நுாற்றாண்டில் துவங்கியது. மலையை செதுக்கி, ’மோனோலித்திக்’ வகை கோவில்களையும், மலைகளை குடைந்து, குடைவரை கோவில்களையும், கற்களை அடுக்கி, கற்றளிகள் என்ற கற்கோவில்களையும் அமைத்தனர்.ராஜசிம்மன் காலத்தில் இருந்து, தமிழகத்தில் துவங்கிய பல்லவ கட்டடக்கலை, பல வகை மாடங்கள், பட்டைகளால் அமைந்த கோபுரங்கள், சிற்பங்கள் நிறைந்த துாண்கள் என, பல புதுமைகளை புகுத்தியது. தஞ்சை பெரிய கோவில்மாமல்லபுரம் சிற்பங்களும், கட்டட அமைப்பும், காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலின் அமைப்பும் தான், நார்த்தாமலை கோவில், தஞ்சை பெரிய கோவில் உள்ளிட்ட வியக்கத்தக்க கோவில்களை கட்ட, சோழர்களுக்கு முன்னோடியாக அமைந்தன. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !