உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாலசமுத்திரத்தில் ஆவணி பிரம்மோற்ஸவம் துவக்கம்

பாலசமுத்திரத்தில் ஆவணி பிரம்மோற்ஸவம் துவக்கம்

பழநி, பழநி முருகன்கோயில் உபகோயிலான, பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோயிலில், நேற்று கொடியேற்றத்துடன் துவங்கிய ஆவணி பிரம்மோற்ஸவம் விழா செப்.,11 வரை நடக்கிறது. பெருமாள் தினமும் காலை 7 மணிக்கு மேல் சப்பரத்தில் வீதிஉலா வருவது, இரவு 7 மணிக்கு மேல் அனுமான், கருடர் போன்ற வாகனங்களில் திருவுலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. செப்.,7ல் திருக்கல்யாணம், செப்.,9ல் தேரோட்டம் நடக்கிறது. விழாவின் முதல் நாளான நேற்று காலை 9:30 மணிக்கு கோயில் கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள், அர்ச்சனை செய்து கொடியேற்றப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏற்பாடுகளை இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர்(பொ) மேனகா செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !