சபரிமலை நடை இன்று திறப்பு
ADDED :3080 days ago
நாகர்கோவில்: திருவோண பூஜைகளுக்காக, சபரிமலை நடை, இன்று மாலை, திறக்கப்படுகிறது. 6-ம் தேதி இரவு, 10:00 மணி வரை நடை திறந்திருக்கும். இன்று மாலை, 5:00 மணிக்கு, மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி, நடை திறந்து, தீபம் ஏற்றுவார். இரவு, 10:00 மணிக்கு, நடை அடைக்கப்படும். நாளை முதல், 6-ம் தேதி வரை, எல்லா நாட்களிலும், காலை, 5:30 முதல் பகல், 12:00 வரை, நெய்யபிஷேகம் நடைபெறும். இரவு, 7:00 மணிக்கு, படிபூஜை நடைபெறும். 3 முதல் 6-ம் தேதி வரை, திருவோண விருந்து நடைபெறும். 6-ம் தேதி, இரவு, 10:00 மணிக்கு, நடை அடைக்கப்படும்.