சிவசக்தி மாரியம்மனுக்கு தீர்த்தக்குட ஊர்வலம்
ADDED :3060 days ago
ஜலகண்டாபுரம்: சிவசக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் முன்னிட்டு, தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. ஜலகண்டாபுரம் அடுத்த, பொடையன்தெரு, சிவசக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது. அதையொட்டி, நேற்று காவிரியில் இருந்து எடுத்து வரப்பட்ட புனிதநீரை, 500க்கும் மேற்பட்ட பக்தர்கள், தீர்த்தக்குடங்களில் எடுத்து, ஜலகண்டாபுரம் வலம்புரி செல்வ விநாயகர், வன்னியர் கோவிலில் இருந்து, ஊர்வலமாக, அம்மன் கோவிலுக்கு கொண்டு சென்று சுவாமியை தரிசித்தனர். இன்று காலை, அம்மன், ஆதிசக்தி விநாயகர், குபேர விநாயகர், நவகிரகங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது.