மழை பெய்ய வேண்டி கஞ்சி கலய ஊர்வலம்
ADDED :2989 days ago
சங்ககிரி: மழை பெய்ய வேண்டி, ஆடிப்பூர கஞ்சி கலய ஊர்வலம் நடந்தது. பருவமழை உரிய காலத்தில் பெய்து, விவசாயம் செழிப்படைய வேண்டும் என, சங்ககிரி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில், நேற்று, ஆடிப்பூர கஞ்சி கலய ஊர்வலம் நடந்தது. அதில், மன்ற தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். மலையடிவாரம் ஈஸ்வரன் கோவில் அருகே, எல்லையம்மன் கோவிலில் இருந்து, 500க்கும் மேற்பட்ட பெண்கள், கஞ்சி கலயத்தை தலையில் சுமந்துகொண்டு, சந்தைப்பேட்டை, புதிய இடைப்பாடி சாலை வழியாக ஊர்வலம் சென்று, பவானி சாலையில் உள்ள மன்றக்கோவிலை அடைந்தனர். இதையடுத்து, சுவாமிக்கு பால் அபிஷேகம், அலங்கார பூஜை நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமியை தரிசனம் செய்தனர்.