உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுவாமிமலையில் டிச.,8ல் திருக்கார்த்திகை தீபம்!

சுவாமிமலையில் டிச.,8ல் திருக்கார்த்திகை தீபம்!

கும்பகோணம்: முருகனின் ஆறுபடை வீடுகளில் நான்காவது படைவீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலில் திருக்கார்த்திகை தீபக்காட்சி டிச., 8ம் தேதி இரவு நடைபெற உள்ளது. கும்பகோணம் அருகே வாமிமலை சுவாமிநாத சுவாமி கே õவில் முருகன் எழுந்தருளியுள் ள படைவீடுகளில் நான்காவது படை வீடாகத் திகழ்கிறது. மூர் த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றால் சிறப்புடையது. இத்தகை ய சிறப்புடைய இத்தலத்தில் தி ருக்கார்த்திகை தீப திருவிழா இ ன்று 30ம்தேதி காலை 9.30ம ணி க்கு மேல் 11மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதை தொடர்ந்து சுப்பிரமணியசுவாமி பரிவாரங்களுடன் மலைக்கோயிலிலிருந்து உற்சவமண்டபம் எழுந்தருளல் நடக்கிறது. அன்றிரவு படிச்சட்டத்தில் திருவீதியுலாவும், திக்பந்தனமும் நடக்கிறது.வரும் டிச.,1ம்தேதி முதல் 7ம்தேதி வரை காலை, மாலை இரு வேளைகளிலும் படிச்சட்டத்திலும், இடும்ப, பூத, ஆட்டுக்கிடா, யானை, காமதேனு, வெள்ளிக்குதிரை வாகனங்களில் சுவாமி திருவீதியுலா நடக்கிறது. வரும் டிச., 4ம்தேதி காலை படிச்சட்டத்திலும், இரவு பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெறுகிறது. இந்த புறப்பாட்டின்போது விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்திலும், சுப்பிரமணியசுவாமி வெள்ளி மயில் வாகனத்திலும், சண்முகசுவாமி தங்கமயில் வாகனத்திலும், பாலசுப்பிரமணியசுவாமி வெள்ளி மயில்வாகனத்திலும், சண்டிகேசுவரர் வெள்ளி ரிஷப வாகனத்திலும், சப்பரத்தில் திருவீதியுலாவும் நடக்கிறது. இதில், திருக்கார்த்திகை தினமான டிச., 8ம்தேதி காலை 9 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நடக்கிறது. இரவு 9மணிக்கு தீபக்காட்சி கோலாகலமாக நடக்கிறது. தங்கமயில் வாகனத்தில் சுப்பிரமணியர், வள்ளி, தேவசேனா, வெள்ளி மயில் வாகனத்தில் பாலசுப்ரமணியர் திருவீதி புறப்பாடு நடக்கிறது. டிச., 9ம்தேதி சுவாமி திருவீதியுலாவும், காவிரியில் தீர்த்தவாரியும், இரவு கொடியிறக்கம் நடைபெற உள்ளது. டிச., 10ம்தேதி இரவு சுவா மி யதாஸ்தானம் சேருகிறார். இவ்விழா நாட்களில் வேதபாராயணம், திருமுறைபாராயணம், சிறப்பு சொற்பொழிவு, இன்னிசை கச்சேரி சிறப்பு நாதஸ்வர இன்னிசை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் மற்றும் இணை ஆணையர் சுவாமிநாதன், துணை ஆணையர் புகழேந்தி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !