காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் 1,008 சக்திகள தீப விழா
ADDED :3055 days ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், ஏகாம்பரநாதர் கோவிலில், காரைக்குடி மற்றும் மதுரை ஸ்ரீஅகத்தியர் அதிர்ஷ்ட தீபக்குழு சார்பில், 1,008 சக்தி கள தீப விழா நடந்தது.ஸ்ரீஅகத்திய மகரிஷியால், சக்திகள தீபம் என்றழைக்கப்படும், 1,008 கும்ப பிரமிடு விளக்கு தீபம், பவுர்ணமி தோறும், நவக்கிரகம் மற்றும் பஞ்சபூதம் உட்பட பல்வேறு தலங்களில், ஏற்றப்பட்டு வருகிறது.அந்த வகையில், நேற்று காஞ்சிபுரம், ஏகாம்பரநாதர் கோவிலில் தீபம் ஏற்றப்பட்டது. உலக நன்மைக்காக நடந்த கூட்டு வழிபாடு நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.