திருவள்ளுர் வீரராகவர் கோயிலில் பவித்ர உற்சவம்
ADDED :3273 days ago
திருவள்ளுர்: திருவள்ளுர் வீரராகவர் கோயிலில் பவித்ர உற்சவம் நேற்று காலை யாக பூஜையுடன் துவங்கியது. பவித்ர உற்சவத்தை முன்னிட்டு, கோவில் வளாகத்தில் நேற்று, யாகசாலை பூஜை நடைபெற்றது. மேலும், வீரராகவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரங்கள் நடந்தன. ஸ்ரீதேவி பூதேவி சமேத உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.