உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாலையை மாற்றும் அய்யப்ப பக்தர்கள்!

மாலையை மாற்றும் அய்யப்ப பக்தர்கள்!

தேனி : தமிழக அய்யப்ப பக்தர்கள் பலர் அய்யப்பன் மாலையை மாற்றி விட்டு முருகனுக்கு மாலை போடத்துவங்கி உள்ளனர். முல்லை பெரியாறு அணை தொடர்பாக ஏற்பட்டுள்ள சர்ச்சையால், அய்யப்ப பக்தர்களுக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கேரளாவில் அரசியல் கட்சியினரும்,வியாபாரிகளும், பொதுமக்களும் பந்த் உட்பட பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தமிழக முதல்வரின் உருவப்பொம்மையை எரிக்கும் செயல்களிலும் ஈடுபட்டுள்ளனர். போராட்டங்களினால் சபரிமலை செல்லும் தமிழக அய்யப்ப பக்தர்களின் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. இது போன்ற பிரச்னைகளைத்தொடர்ந்து, கேரள அரசுக்கு வருவாய் தரும் அய்யப்பன் கோயிலுக்கு செல்வதை புறக்கணிக்க தமிழக அய்யப்ப பக்தர்கள் முடிவு செய்துள்ளனர். இதனால் அய்யப்பன் மாலையை மாற்றி விட்டு, பழனி முருகனுக்கு மாலை போட்டு வருகின்றனர். காவி வேட்டியை மாற்றி பச்சை வேட்டிக்கு மாறி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !