பழநி கோயில் உண்டியல் திறப்பு!
ADDED :5114 days ago
பழநி : பழநி கோயில் உண்டியல் வசூல், ஒரு கோடி 43 லட்சத்தை எட்டியது. உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைகோயில் கார்த்திகை மண்டபத்தில் எண்ணப்பட்டன. உண்டியல் வசூல்: ஒரு கோடி 42 லட்சத்து 98 ஆயிரத்து 610 ரூபாய். தங்கம்- 793 கிராம். வெள்ளி- 7736 கிராம். வெளிநாட்டு பணம்- 1168. இது, 31 நாட்களில் கிடைத்த வசூல். கோயில் இணை கமிஷனர் பாஸ்கரன், துணை கமிஷனர் மங்கையர்கரசி, உதவி கமிஷனர் பச்சையப்பன் பங்கேற்றனர்.