குறுக்குத்துறை முருகன் கோயிலில் ஆவணித்தேரோட்டம் விமரிசை
திருநெல்வேலி: நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆவணித்தேரோட்டம் நேற்றுவிமரிசையாக நடந்தது.நெல்லையில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள இக்கோயில் திருச்செந்தூர்சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு நிகரானது. இங்கு ஆவணித்திருவிழா கடந்த ஆக.,27ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், சப்பர வீதி உலாவும் நடந்தது.கடந்த 2ந் தேதி அதிகாலை 5 மணிக்கு ஆறுமுகர் உருகு சட்டசேவையும், சிறப்பு அலங்கார தீபாராதனையும், தண்டியல் பல்லக்கில் சுவாமி வீதி உலாவும், மதியம் வெற்றிவேர் சசப்பரத்தில் ஆறுமுகபெருமாள் எழுந்தருளினார்.இரவில் சுவாமி தங்க சப்பரத்தில் நெல்லை டவுனுக்கு சிவப்பு சாத்தி எழுந்தருளலும், வீதி உலாவும் நடந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலையில் நடந்தது.
இன்று காலை சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், சிறப்பு பூஜைகளும் நடந்தது. காலை 8 மணிக்கு தேரோட்டம் ரதவீதிகளில் நடந்தது. இன்று புதன்கிழமை மதியம் 12 மணிக்கு தாமிரபரணி ஆற்றில் சுவாமிக்கு தீர்த்தவாரியும், சிறப்பு பூஜையும் நடக்கிறது. 7ந் தேதி இரவு 8 மணிக்கு தெப்ப திருவிழா நடக்கிறது.