காரைக்கால் காவேரி (புஷ்கரம்) குடமுழுக்கு விழா: கலெக்டர் ஆய்வு
காரைக்கால்: காரைக்காலில் நடைபெறவுள்ள காவேரி (புஷ்கரம்) குடமுழுக்கு விழாவுக்காக பணிகளை கலெக்டர் கேசவன் ஆய்வு மேற்கொண்டார்.
காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில் திருநள்ளார் அகலங்கண்ணு பகுதியில் உள்ள அரசலாற்றில் காவேரி (புஷ்கரம்)குடமுழுக்கு வரும் 12ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடைபெறுகிறது.இதனால் அகலங்கண்ணு நீர்தோக்கு அணை அருகில் சுமார் 4அடி உயரத்தில் பள்ளம் தோண்டி மணல் மூட்டைகள் அடுக்கு பணிகள் பொதுப்பணித்துறை மூலம் நடைபெற்று வருகிறது.மேலும் அங்குள்ள அகாயம் தாமரைகளை பொக்லைன் இயந்திரம் மூலம் சுத்தம்செய்யும் பணிகள் ஈடுப்பட்டு வருகின்றனர். மேலும் பொதுமக்கள் நீராடுவதற்காக மணம்மூட்டைகள் அமைக்கப்பட்டு தண்ணீர் தோக்குவதற்காக பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசலாற்றில் தண்ணீர் இல்லாமல் கணப்பட்டு வரும் நிலையில் அப்பகுதியில் உள்ள அரசு பேர் மூலம் தண்ணீரை தோக்குபணிகள் நடைபெற்று வருகிறது.இப்பணியை மாவட்ட கலெக்டர் கேசவன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.பின் பணிகளை விரைவில் முடிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். துணை மாவட்ட ஆட்சியர் பண்ணீர்செல்வம், பொதுப்பணித்துறை கண்காணிப்பு அதிகாரி சண்முகசுந்தரம் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் சென்றனர். ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காவேரி புஸ்கரம் குடமுழுக்கு விழாவில் கலந்து கொள்ளுவதால் மாவட்ட நிர்வாகம் வரும் பொதுமக்களுக்கு தேவையான வசதிகளை மேற்கொண்டு வருகிறது.