மதுரையில் சித்தர் சுந்தரானந்தர் ஜெயந்தி விழா
மதுரை: சித்தர் சுந்தரானந்தர் ஜெயந்தி விழா நாளை( செப் 9ல்) மதுரை, புதுஜெயில் ரோடு அருகில் உள்ள ஆதி சிவன் கோயிலில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
சித்தர் சுந்தரானந்தர் ஆவணி மாதம் ரேவதி நட்சத்திரத்தில் அவதரித்தவர்.அகத்திய முனிவருடன் சதுரகிரி மலையில் பல காலங்கள் தவம் செய்த மதுரையின் வல்லப சித்தர் மனித வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்க நேருவதற்கு காரணம் பூர்வ ஜென்ம வினைகள் ஆகும். இந்த ஜென்மத்தில் சித்தர்களையும், மகான்களையும், வழிபடுவதன் மூலம் அவர்களது அருளாசி பெற்று நமது பூர்வ ஜென்ம ஊழ்வினைகளை தீர்க்கலாம். சித்தர் சுந்தரானந்தர் ஜெயந்தி விழாவில் கலந்து கொண்டு வழிபாடு செய்தவன் மூலம் திருமண பாக்கியம், புத்திரபாக்கியம், சொந்த வீடு பாக்கியம், தொழிலில் மேன்மை. நல்ல உடல் ஆரோக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 700 வருடங்களுக்கு முந்தைய மிகப் பழமையான சித்தர் சுந்தரானந்தர் அருள் சக்தி நிறைந்த இக்கோயிலில், விழாவை முன்னிட்டு, திருவிளக்கு வழிபாடு, ஆராதனை மற்றும் பகல் 11 மணிக்கு அன்னதானமும் நடைபெறுகிறது.