செம்பை சங்கீத உற்ஸவம் நிறைவு
பாலக்காடு: செம்பை வைத்தியநாத பாகவதரின் 121வது பிறந்த நாளையொட்டி, பாலக்காட்டில் நடந்த சங்கீத உற்ஸவம் நேற்று நிறைவடைந்தது. செம்பை பார்த்தசாரதி கோவில் வளாக கலையரங்கில், கடந்த இரு நாட்கள் சங்கீத உற்ஸவம் நடந்தது. நிறைவு நாளான நேற்று, செம்பை வித்யாபீடத்தின், 32-வது ஆண்டு மாநாட்டை, ஆலத்துார் எம்.பி., பிஜூ துவக்கி வைத்து பேசுகையில், ”இந்த விழாவை ஆண்டுதோறும், ஐந்து நாட்கள் கொண்டாட வேண்டும்; இதற்கு தேவையான உதவிகளை அளிக்க, அரசுக்கு பரிந்துரைப்பேன்,” என்றார். மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் நாராயணதாஸ் தலைமை வகித்தார்.கேரள கலாமண்டலம் பதிவாளர் சுந்தரேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். செம்பை வித்யாபீடம் செயலர் முருகன் வரவேற்றார். துணைத்தலைவர் செம்பை சுரேஷ் நன்றி கூறினார். தொடர்ந்து, மண்ணுார் ராஜகுமாரன் உண்ணி குழுவினரின் சங்கீத கச்சேரி நடந்தது. ஒற்றப்பாலம் ஜயதேவன் வயலின், ஆலுவா கோபாலகிருஷ்ணன் மிருதங்கம் வாசித்தனர்.