நெல்லிக்குப்பம் ஐயப்பன் கோவிலில் சங்கடசதுர்த்தி பூஜை
ADDED :2951 days ago
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் ஐயப்பன் கோவிலில் சங்கடசதுர்த்தி பூஜைகள் நடந்தது. நெல்லிக்குப்பம் அருள்தரும் ஐயப்பன் கோவிலில் சங்கடசதுர்த்தியை முன்னிட்டு ஐயப்பனுக்கும் விநாயகருக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. கோவில் வளாகம் முழுவதும் பூக்களால் அலங்கரித்து பூவலங்கி சேவை நடந்தது.ஐயப்பனும் விநாயகரும் சிறப்பு அலங்காரத்தில் கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.வரசித்தி விநாயகர் கோவிலிலும் சங்கடசதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.