உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெள்ளக்குளத்தில் கும்பாபிஷேகம்

வெள்ளக்குளத்தில் கும்பாபிஷேகம்

மரக்காணம்: மரக்காணம் அடுத்த வெள்ளக்குளம் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி நேற்று முன்தினம் மாலை 6.00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கணபதிஹோமம், கங்கை திரட்டல், வாஸ்து சாந்தி, காப்பு கட்டுதல், கும்ப அலங்காரம், பிரவேச பலி, முதற்கால யாகசாலை பூஜைகள் நடந்தது. நேற்று காலை 7.00 மணிக்கு கோ பூஜை, நாடி சந்தானம், விசேஷ மூலிகை திரவிய ஹோமங்கள், இரண்டாம் கால யாகசாலை பூஜைகள், மகாதீப ஆராதனை நடந்தது. தொடர்ந்து காலை 9.00 மணிக்கு முத்துமாரியம்மன் கோவில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !