உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொடைக்கானல் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

கொடைக்கானல் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

கொடைக்கானல் : கொடைக்கானல் அண்ணாசாலையில் உள்ள தேவி, பூமிதேவி, வரதராஜப் பெருமாள் கோயிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. இதைமுன்னிட்டு நேற்று காலை 5. 00 மணிமுதல் 7.15 வரை புண்யாஹவாசனம்,அக்னி ஆராதாணம், தகுந்த ஹோமம், பூர்ணாஹூதி,யாத்ராதானமும், 7.20 மணிக்கு கும்பம் புறப்பாடு நிகழ்ச்சியும் நடந்தது. ஸ்ரீதேவி, பூமாதேவி, வரதராஜ பெருமாள், பரிவார தேவைதைகளான விநாயகர், ஐயப்பன், கருடாழ்வார், பக்த ஆஞ்சநேயருக்கு நேற்று காலை 7.35 - 8.30 மணிக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. சிவபிரியா ஓட்டல் உரிமையாளர் சிவபெருமாள், முன்னாள் நகராட்சி தலைவர் வி.எஸ்.கோவிந்தன், ராஜேஷ்கண்ணா, செல்வம் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !