வடமதுரை கோயில் கும்பாபிஷேகம்
ADDED :3061 days ago
வடமதுரை : தென்னம்பட்டி கெச்சானிபட்டியில் விநாயகர், வெங்கடேச பெருமாள், திருமம்மாள், சென்னம்மாள், பாப்பம்மாள், செட்டியம்மாள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த செப்.8ல் புனித நீர் குடங்கள் அழைப்புடன் கும்பாபிஷேக விழா துவங்கி 3 நாட்களாக யாக சாலை பூஜைகள் நடந்தன. நேற்று காலை கடங்கள் புறப்பாடாகி விமான கலசங்களுக்கு புனித நீருற்றி கும்பாபிஷேகம் நடந்தது. தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயில் தலைமை அர்ச்சகர் ஜவஹர் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். பரமசிவம் எம்.எல்.ஏ., முன்னாள் ஒன்றிய தலைவர் ராஜசேகர் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.