அம்மா ஜெபித்த ஸ்லோகம்
சுக்ராச்சாரியார், அசுர மன்னர் மகாபலிக்காக விஸ்வஜித் யாகத்தை நடத்தினார். அதன்
பயனாக ஹோம குண்டத்தில் இருந்து தேர், வில், அம்புறாத்துாணி, பலவித கவசங்கள் கிடைத்தன. அவற்றுடன் புறப்பட்ட மகாபலி, தேவலோகத்தை சூறையாடினான். தேவர்கள் அஞ்சி ஓடினர்.
தேவர்களின் தாய் அதிதி தன் பிள்ளைகளின் நிலை கண்டு வருந்தினாள். விஷ்ணுவைச் சரணடைந்து, யஜ்ஞேச யஜ்ஞ புருஷாச்யுத தீர்த்த பாத தீர்த்த ச்ரவ: ச்ரவண மங்கள நாமதேயாஎன்ற ஸ்லோகம் சொல்லி வழிபட்டாள்.
யாகங்களால் ஆராதிக்கப்படுபவனே!
பழமை மிக்கவனே! புதுமையானவனே!
கங்கையை திருவடியில் கொண்டவனே!
ஆறு போல பெருகி அருள் பொழிபவனே! கல்யாண குணம் மிக்க திருநாமங்கள் கொண்டவனே!
என்பது இந்த ஸ்லோகத்தின் பொருள்.
விஷ்ணு அதிதி தேவியிடம், வாமன மூர்த்தியாக அவதரித்து மகாபலியிடமிருந்து தேவர்களை காத்தார். அதிதி, ஜெபித்த இந்த ஸ்லோகத்தை சொன்னால் பிள்ளைகள் தாயின் மீது பாசம் மிக்கவர்களாக இருப்பர்.