மயிலம் கோவிலில் கிருத்திகை விழா
ADDED :2947 days ago
மயிலம்: மயிலம் சுப்பரமணியர் சுவாமி கோவிலில் கிருத்திகை விழா நடந்தது. மயிலத்தில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் சுவாமி திருக் கோவிலில் ஆவணி மாத கிருத்திகை விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டது. கோவில் வளாகத்திலுள்ள வினாயகர், பாலசித்தர், மூலவர், சனிச்ஸ்வர சுவாமிகளுக்கு பால், சந்தனம், இளநீர், பஞ்சாமிர்தம், பன்னீர் உள்ளிட்ட நறுமணப் பொருட்களினால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு தீபாரதனை நடந்தது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பிற்பகல் 1 மணிக்கு கோவில் மண்டபத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.