கேதார்நாத்திற்கு ஹெலிகாப்டர் சேவை நிறுத்தம்
ADDED :2944 days ago
டேராடூன் : புகழ்பெற்ற கேதார்நாத் கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக உத்திரகண்ட் அரசு சார்பில் ஹெலிகாப்டர் சேவை இயக்கப்பட்டு வந்தது. ஹெலிகாப்டரில் இருந்து வெளியேறும் புகையால் கேதார்நாத் பகுதியில் இயற்கை வளம் பாதிக்கப்படுவதாக தேசிய பசுமை தீர்ப்பாயம் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் ஹெலிபேட் அமைப்பதற்கு பல மரங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இதனையடுத்து கேதார்நாத் கோயிலுக்கு செல்லும் ஹெலிகாப்டர் சேவையை உத்தரகாண்ட் அரசு நிறுத்தி உள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் அரசால் வெளியிடப்பட்டுள்ளது.