காஞ்சி கோவிலில் 21ல் நவராத்திரி விழா
ADDED :3003 days ago
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், செப்., 21 முதல், 29 வரை, நவராத்திரி விழாவையொட்டி, இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், சாரதா நவராத்திரி கலை நிகழ்ச்சிகள் டிரஸ்டின் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி நடத்தப்படுகிறது.அந்த வகையில், 37ம் ஆண்டு, நவராத்திரி விழா, செப்., 21 முதல், 29 வரை, நவராத்திரி கொலு மண்டபத்தில், தினமும், இரவு, 7:30 முதல், 10:00 மணி வரை, இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.இதில், காஞ்சிபுரம் சங்கரமடம் ஆஸ்தான வித்வான்கள் மற்றும் பிரபல சங்கீத வித்வான்களின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.அதே போல், சங்கரமடம், மகாசுவாமிகள் பிருந்தாவனத்தில், மாலை, 6:00 முதல், இரவு, 7:00 மணி வரை, இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.