உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கதிர் நரசிங்க பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜென்மாஷ்டமி

கதிர் நரசிங்க பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜென்மாஷ்டமி

சாணார்பட்டி: ஆவணி மாத ரோகிணி நட்சத்திரம், அஷ்டமி திதியை முன்னிட்டு கோபால்பட்டி அருகே வி.மேட்டுப்பட்டி கதிர் நரசிங்க பெருமாள் கோயிலில் நேற்று ஸ்ரீகிருஷ்ணர் ஜென்மாஷ்டமி விழா நடந்தது. சுவாமிக்கு பால், சந்தனம், இளநீர், பன்னீர், தயிர், திருமஞ்சனம் உள்பட 16 வகை அபிஷேகங்கள் நடந்தன. பின், அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் சார்பில் நரசிம்மன், ராஜசிம்மன் உள்ளிட்ட பரம்பரை அறங்காவலர் குழுவினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !