உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பகவான் யோகிராம் சுரத்குமார் மகராஜின் ஜெயந்தி விழா!

பகவான் யோகிராம் சுரத்குமார் மகராஜின் ஜெயந்தி விழா!

திருக்கோவிலூர்: திருவண்ணாமலை, பகவான் யோகிராம் சுரத்குமார் மகாராஜின், 93வது ஜெயந்தி விழாவை முன் னிட்டு, அதிஷ்டானத்தில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. திருவண்ணா மலை யில், பகவான் யோகிராம் சுரத்குமார் மகராஜின், 93வது ஜெயந்தி விழாவின், இரண்டாம் நாள் நிகழ்ச்சி நேற்று நடந்தது. காலை 6.30 மணிக்கு பிரதான் மந்திரில், சிறப்பு ஹோமம், கலச பூஜை, 7.45 மணிக்கு பகவானின் அதிஷ்டானத்தில் சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை மற்றும் பூஜைகள் நடந்தன.தொடர்ந்து, 11 மணிக்கு பக்தர்களின் பஜனை, மாலை 4 மணிக்கு யோகிராம் சுரத்குமார் வித்யாலயா மாணவ, மாணவியரின் நாடகம் மற்றும் நாட்டியம் நடந்தது.மாலை 6 மணிக்கு குரு ஸ்ரீ மதி மிருணாளினி தியாகராஜன் முன்னிலையில், செல்வி கயல்விழி ஜெய கிருஷ்ணா வின் பரதநாட்டியம் நடந்தது. இரவு 7.45 மணிக்கு பகவான், வெள்ளி ரதத்தில் பவனியும், 8 மணிக்கு, மங்கள ஆரத்தியும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.விழா ஏற்பாடுகளை ஆஸ்ரம நிர்வாகி, நீதிபதி அருணாச்சலம் செய்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !