அங்கமங்கலம் கோயிலில் இன்று வருஷாபிஷேகம்
ADDED :5112 days ago
தூத்துக்குடி : அங்கமங்கலம் ஸ்ரீஅன்னபூரணி சமேத ஸ்ரீ நரசிம்மசாஸ்தா கோயிலில் இன்று வருஷாபிஷேக விழா நடக்கிறது. அங்கமங்கலம் ஸ்ரீஅன்னபூரணி சமேத ஸ்ரீநரசிம்ம சாஸ்தா கோயிலில் இன்று காலை 8 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் தனுர் லக்கனத்தில் வருஷாபிஷேகம் நடக்கிறது. வருஷாபிஷேகத்தை தொடர்ந்து காலை 8 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மஹா அபிஷேகமும், அதைத்தொடர்ந்து காலை 10.30 மணிக்கு மேல் 12 மணிக்குள் திருவிளக்கு பூஜையும், தொடர்ந்து பகல் 1 மணிக்கு அன்னதானமும் நடக்கிறது. கோயிலில் தினசரி அதிகாலை பிரம்ம முகூர்த்த வேளையில் காலை 4 மணிக்கு மேல் 6 மணிக்குள்ளாக பூஜைகள் நடந்துவருகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை அங்கமங்கலம் ஸ்ரீஅன்னபூரணி சமேத ஸ்ரீ நரசிம்மசாஸ்தா கோயில் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்துள்ளனர்.