அங்காளம்மன் கோவில் திருக்கொடி ஏற்றுதல்
ஈரோடு: ஈரோடு கவுந்தப்பாடி பாவாண்டக்கவுண்டனூர் அங்காளம்மன் கோவிலில், டிசம்பர் 8ம் தேதி திருக்கொடி ஏற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது. ஈரோடு கவுந்தப்பாடி பாவாண்டகவுன்டனூரில் அங்காளம்மன் கோவில் உள்ளது. ஆண்டு தோறும் திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றும் போது, அங்காளம்மன் கோவிலிலும் திருக்கோடி ஏற்றுதல் நிகழ்ச்சி நடப்பது வழக்கம். நடப்பாண்டு டிசம்பர் 8ம் தேதி திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது. அதே நாளில், கவுந்தப்பாடி பாவாண்டகவுண்டனூர் அங்காளம்மன் கோவிலிலும், திருக்கொடி ஏற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று மதியம் மூன்று மணிக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார பூஜையும் நடக்கிறது. தொடர்ந்து ஆறு மணிக்கு திருக்கோடி ஏற்றுதல் (பரணி தீபம்) நிகழ்ச்சி நடக்கிறது. தலைவர் பாலசுப்பிரமணியம், செயலாளர் முருகேசன், துணை செயலாளர்கள் செல்வக்குமார், செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.