துறையூரில் டிச.,5ல் கோவில் கும்பாபிஷேகம்
துறையூர்: துறையூர் வடமலைப்பிள்ளை தெருவில் எழுந்தருளியுள்ள ஸ்ரீபிங்கள விநாயகர், ஸ்ரீமுத்துமாரியம்மன், ஸ்ரீமதுரை வீரன் கோவில் கும்பாபிஷேக விழா டிசம்பர் ஐந்தாம் தேதி காலை ஒன்பது மணிக்கு நடக்கிறது.கும்பாபிஷேக விழாவையொட்டி டிசம்பர் மூன்றாம் தேதி காலை காவேரி புனிதநீர் எடுத்து வந்து குலதெய்வ வழிபாடு செய்தும், நான்காம் தேதி காலை கணபதி பூஜை, ஹோமம் செய்து தீபாராதனை நடைபெறும். மதியம் அரசு, வேம்பு திருமணமும், கோபுர கலசங்கள் ஸ்தாபனம், கண் திறப்பு நடைபெறும். மாலையாக பூஜை துவங்கி தீபாராதனை நடக்கிறது.கும்பாபிஷேக விழாவன்று இரண்டாம் கால யாக பூஜை, கடம் புறப்பாட்டுக்கு பின் காலை ஒன்பது மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்து ஸ்வாமிகளுக்கு தீபாராதனை நடத்தி பிரசாதம், அன்னதானம் வழங்கப்படும். இரவு ஸ்வாமி சர்வ அலங்காரத்தில் வீதியுலா நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை அப்பகுதி மக்கள் செய்து வருகின்றனர்.