உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில் காலபைரவர் வழிபாடு

கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில் காலபைரவர் வழிபாடு

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில், தேய்பிறை அஷ்டமியை ஒட்டி காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில், தேய்பிறை அஷ்டமியன்று, கால பைரவருக்கு, பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், தேன், தயிர், அரிசி மாவு அபிேஷக பூஜை நடந்தது. பின், கால பைரவருக்கு, ரோஜா மலர் அலங்காரம் நடந்தது. சிவலோகநாதர், சிவலோகநாயகி, முருகர் ஆகியோருக்கு பூஜை செய்த பின், காலபைரவருக்கு அர்ச்சனை செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்கள் தீபம் ஏற்றி, கால பைரவரை வழிபட்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !