உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா

முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா

கம்மாபுரம்: கம்மாபுரம் அடுத்த மேலக்குப்பம் முனீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி, நேற்று முன்தினம் காலை 7:30 மணியளவில் கணபதி ேஹாமம், நவக்கிரஹ ேஹாமம், கோ பூஜை, தீபாராதனை, மாலையில் வாஸ்து சாந்தி, காப்புக்கட்டுதல், கும்ப அலங்காரம் நடந்தது. முக்கிய நிகழ்வாக, நேற்று காலை 7:30 மணிக்கு விநாயகர் வழிபாடு, நாடி சந்தானம், தீபாராதனை, காலை 10:00 மணியளவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மூலவர், பரிவார சுவாமிகளுக்கு அபிஷேகம் நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர். அதேபோல், கோபாலபுரம் திரவுபதி அம்மன் கோவிலில், நேற்று காலை 10:00 மணியளவில் கும்பாபிஷேகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !