வீரபக்த ஆஞ்சநேயர் கோவிலில் தமிழ் மாத முதல் ஞாயிறு பூஜை
ADDED :2947 days ago
மல்லசமுத்திரம்: காளிப்பட்டி வீரபக்த ஆஞ்சநேயர் கோவிலில், நேற்று தமிழ்மாத முதல் ஞாயிறு சிறப்பு பூஜைகள் நடந்தன. திருச்செங்கோடு தாலுகா, காளிப்பட்டி கந்தசுவாமி முருகன் கோவில் பின்புறத்தில் உள்ள, சென்றாய பெருமாள் கோவில் வளாகத்தில் வீரபக்த ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. ஒவ்வொரு தமிழ் மாத முதல் ஞாயிற்றுக்கிழமையன்று, சிறப்பு பூஜைகள் நடப்பது வழக்கம். அதன்படி, நேற்று நடந்த பூஜையில், ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று பிரதோஷம் என்பதால், காளிப்பட்டி, மல்லசமுத்திரம், ஆட்டையாம்பட்டி, முத்தனம் பாளையம், மங்களம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.