நவசக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :5426 days ago
புதுச்சேரி : திலகர் நகர் நவசக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. வழுதாவூர் சாலை, திலகர் நகர் நவசக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக பணி, கடந்த 29ம் தேதி காலை 5 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன், யாகசாலை பூஜைகள் துவங்கியது. நேற்று (1ம் தேதி) காலை 9.30 மணியளவில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. பிற்பகல் 12 மணிக்கு சுவாமிக்கு மகா அபிஷேகம் நடந்தது. விழாவில் பாசிக் சேர்மன் அசோக் ஆனந்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.