அம்மனின் மனம் குளிர...
ADDED :2947 days ago
நவராத்திரியை ஒட்டி வீட்டில் சுமங்கலிகள் கன்யா பூஜை செய்வர். இந்நாளில் வீட்டை கோலமிட்டு அலங்கரிக்க வேண்டும். பத்து வயதுக்கு உட்பட்ட சிறுமியரை ஒற்றைப்படை எண்ணிக்கையில் பூஜைக்காக தேர்ந்தெடுக்க வேண்டும். அம்மனின் அம்சமாகக் கருதி மாலையிட்டு, பாட்டு பாடி நலுங்கு வைக்க வேண்டும். இனிப்பு வகைகள், ஆடை, ஆபரணம் வழங்கி காலில் விழுந்து ஆசி பெற வேண்டும். இதனால் குழந்தை மனம் கொண்ட பராசக்தி அன்னை மனம் குளிர்ந்து அருள்புரிவாள்.