ஏழைகளுக்கு உணவளியுங்கள்
ADDED :2950 days ago
நீ விருந்து நடத்தும் போது, உன் நண்பர்களையோ, உடன் பிறந்தவர்களையோ, உன் உற்றார் உறவினரையோ, செல்வந்தர்களான அண்டை அயலாரையோ அழைக்க வேண்டாம். மறுதரம் அவர்களும் உன்னை அழைப்பார்கள். அப்போது அது உனக்கு பிரதிபலனாகி விடும், என்று சொல்லும் இயேசு,. ஏழைகளையும், ஊனமுற்றவர்களையும், முடவர்களையும், குருடர்களையும் கூப்பிடுவாயாக. அவர்கள் பதிலுக்கு பதில் செய்ய முடியாதவர்களாய் இருந்தால் நீ பாக்கியவானாய் இருப்பாய், என்கிறார். எனவே தானம் செய்யும்போது, ஏழைகளை விரும்பி அழைத்து அவர்களுக்கு செய்ய வேண்டும்.